Xossip

Go Back Xossip > Mirchi> Stories> Regional> Tamil > IRUVAR

Reply Free Video Chat with Indian Girls
 
Thread Tools Search this Thread
  #1  
Old 20th May 2011
mohini_7 mohini_7 is offline
Custom title
 
Join Date: 27th March 2007
Posts: 2,004
Rep Power: 36 Points: 8151
mohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autograph
IRUVAR

சுமதியும் நானும்(ஸ்ரீமதி) ரெட்டை பிறவிகள். ஒரு நடுத்தர அரசு வேலையில் இருந்த சுந்தரேசன் என்பவருக்கு பிள்ளைகள். அம்மா வீட்டிலேயே அருகாமையில் இருந்த சிலருக்கு வாய் பாட்டு சொல்லி குடுத்து வீட்டு வருமானத்தை அதிகரித்தார்கள். நானும் சுமதியும் ஐடென்ட்டிகள் ரெட்டையர் அதாவது இருவரும் ஒன்றாக இருக்கும் போது யார் சுமதி யார் ஸ்ரீமதி என்பது எளிதில் கண்டுப்பிடக்க முடியாது. கைக்குழந்தையாக இருந்த போது இருவரும் ஒரே உடை ஒரே சிகை அலங்காரம் என்று போட்டு இருப்போம். இருவரில் நான் சில நிமிடம் தள்ளி பிறந்தேன் ஆக சுமதி என் அக்கா என்று எடுத்துக்கொள்ளபட்டது. படிப்பில் விளையாட்டில் என்று எதுலேயும் இருவரும் நன்றாக பரிமளிதோம் இருவரும் ரொம்ப ஒற்றுமையாக இருந்தோம். என்னடா தீதேரென்று இருந்தோம் என்று கடந்த காலத்தில் சொல்லுகிறேனே என்று யோசிக்க வேண்டாம் ஆம் இருவரும் இருந்தோம் ஆனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் பாம்பும் கீரியும் போல எதிரிகள் ஆகிவிட்டோம்.
இந்த வருடம் இருவரும் பட்ட படிப்பு இறுதி ஆண்டு படிக்கிறோம் ஆனால் வெவ்வேறு கல்லூரி காரணம் நான் பொறியியல் படிக்கறேன் சுமதி சட்டம் படிக்கிறாள். இருவர் கல்லூரியும் ஒரே ஏரியாவில் இருந்தது. ஆனால் இருவரும் ஒன்றாக கல்லூரிக்கு போகவில்லை சுமதி அடம் பிடித்து அப்பா கிட்டே இருந்து ஒரு இரு சக்கரம் வாங்கி கொண்டு அதில் தான் கல்லூரிக்கு சென்று வந்தால் நான் எங்க கல்லூரி பஸ்ஸில் போனேன். அவள் சட்ட கல்லூரி என்பதால் அவர்களுக்கு எங்க கல்லூரி போல கட்டுபாடுகள் அதிகம் இல்லை உடை கட்டுப்பாடு அட்டெண்டென்ஸ் என்று எதுவுமே இல்லாத காரணத்தால் சுமதி அவள் நினைத்த படி கல்லூரிக்கு செல்வதும் செல்லாமல் இருப்பதும் வழக்கமாக எனக்கு அவள் மீது பொறாமை ஏற்ப்பட்டது. அனால் முதலில் அந்த பொறாமை எங்களுக்குள் பெரிய விரிசலை உண்டு பண்ணவில்லை என்றாலும் நாளடைவில் அது நன்றாக மனதில் குடிக்கொண்டு ஒரு சாத்தானை என்னுள் உருவாகியது. அதன் விளைவு சுமதியின் உடைகள் சில காணாமல் போயின அவள் வாகனம் அடிகடி பழுது ஆனது. சுமதி சில நாட்களிலேயே அதன் காரணத்தை அலச ஆரம்பித்து அதற்கு முழு முதற் காரணம் ஸ்ரீமதி ஆகிய நான் என்பதை தெரிந்து கொண்டாள். ஒரு நாள் இரவு இருவரும் எங்கள் அறையில் இருக்கும் போது அதை பற்றி என்னிடம் கேட்க நான் மமதையில் ஆமாம் நான் தான் அதற்கு காரணம் உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணி கொள் என்று சவால் விட்டேன்.
இப்படி நான் தைரியமாக அவளுக்கு சவால் விட்டது சுமதியை உலுப்பி விட்டது. அவள் உள்ளும் என் உடம்பில் ஓடும் அதே ரத்தம் தானே ஓடுகிறது எனக்கு எப்படி ஈகோ இருந்ததோ அதே போல் அவளுக்கும் இருக்க தானே செய்யும் அவள் சவாலை ஏற்று கொண்டதற்கான அறிகுறி அடுத்த சில நாட்களில் எனக்கு என் தாய் மூலமாக தெரிந்தது. அன்று நான் பெண்களின் அந்த மாத உடல் உபாதையால் இருந்ததால் கல்லூரிக்கு செல்லவில்லை தூங்கி எழுந்த போது அம்மா வெள்ளிகிழமை என்பதால் பூஜை அறையில் இருந்தார்கள் நான் என் அறையை விட்டு பூஜை முடியும் வரை வெளியே வர கூடாது என்பது நான் அறிந்து இருந்ததால் அறையில் இருந்த தொலைகாட்சியை சத்தமாக வைத்து MTV பார்க்க விழைந்தேன்.
என் அறையில் இருந்து சத்தம் அடுத்து இருந்த பூஜை அறை வரை கேட்க அம்மா பூஜை வேலையை பார்த்துக்கொண்டே "ஹே ஸ்ரீ உனக்கு வர வர ரொம்ப திமிர் ஆகிவிட்டது ஏன் இப்படி சத்தம் வைத்து இருக்கே" என்று குரல் குடுக்க எனக்கு என்ன அம்மா நான் எப்போவுமே பண்ணும் செயலுக்கு தேவை இல்லாமல் திமிர் அது இது என்று கத்துகிறாள் என்று கோவத்துடன் இன்னமும் அதிகமாக ஒலியை அதிகமாக்கினேன். இந்த முறை அம்மா பூஜை அறையை விட்டு வந்து மூடி இருந்த என் அறையின் கதவை பலமாக தட்டி "ஸ்ரீ கழுதை நான் சொல்ல சொல்ல சத்தத்தை அதிகமாக்குகிறையா என்று அலற நான் அதை காதில் வாங்கி கொள்ளாமல் உட்கார்ந்து இருந்தேன்.

Reply With Quote
  #2  
Old 20th May 2011
mohini_7 mohini_7 is offline
Custom title
 
Join Date: 27th March 2007
Posts: 2,004
Rep Power: 36 Points: 8151
mohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autograph
அம்மா பூஜை முடியும் வரை என் அறைக்குள் வருவதோ அல்லது என்னை தொடுவதோ பண்ண மாட்டாள் என்று எனக்கு நன்றாக தெரியும். அம்மா சென்று விட்டாள் என்பது எனக்கு புரிந்து நான் TV யை நிறுத்தி குளிக்க சென்றேன். இந்த சில நாட்கள் குளிப்பது என்பது எல்லா பெண்களுக்குமே ஒரு வகையில் எரிச்சல் தர கூடிய செயல் என்றாலும் அடுத்த வகையில் இந்த நாட்களில் ஒரு முறைக்கு பல முறை குளிக்க வேண்டும் என்று எல்லோருமே விரும்புவார்கள். நான் குளிக்க சென்று கல்லூரிக்கு கிளம்ப வேண்டும் என்ற அவசரம் இல்லாததால் நிதானமாக குளியல் வேலையில் ஈடுப்பட்டேன்.
ஒரு வழியாக குளித்து வெளியே வர அம்மாவும் பூஜை முடித்து ஹாலில் அமர்ந்து அன்றைய தினசரியை படித்து கொண்டு இருந்தா. நான் நைடிடனே அம்மா அருகே போய் அம்மா பசிக்குது என்றேன் அம்மா திரும்பி என்னை முறைத்து "பசிக்குதுனா அங்கே டைனிங் டேபிள் மேலே இருப்பதை எடுத்து சாப்பிடு" என்று கூற அவள் குரலில் இருந்த கோவம் என்னை தாக்க நானும் அவளுக்கு நிகராக அவள் பக்கத்தில் அமர்ந்து நீ போய் எடுத்து வா என்று சொன்னேன். அம்மா எழுந்து போய் தட்டில் வழக்கமான இட்டிலி பொடி வைத்து அடுத்த கையில் பிளாஸ்கில் இருந்து சூடாக பால் ஒரு டம்பளரில் ஊற்றி எடுத்து வந்து என் மடி மீது வைத்து இல்லை போட்டு "ஸ்ரீ வர வர நீ பண்ணறது எதுவுமே சரி இல்ல அப்பாவுக்கு தெரிந்தால் அவர்ருத்ரதாண்டவம்ஆடுவார்ஏண்டிஇப்படிரெண்டுபேரும்என்உயிரைஎடுக்கறிங்க" என்றுசொல்லஎனக்குஅந்தரெண்டுபேரும்என்றவார்த்தையில்தான்அம்மாவின்இன்றையசெயலுக்குஅடித்தளம்என்றுஎனக்குபுரிந்தது. சுமதிஅம்மாகிட்டேஏதோசொலிஇருக்காஎன்று. அம்மாசொன்னதும்நான்அவளைபிலுபிலுஎன்றுபிடித்துக்கொண்டேன்.
அம்மா என்ன ரொம்ப கத்தறே நான் என்ன பண்ணினேன் நீ தானே சொலி இருக்கே இந்த மூணு நாட்கள் நீ பூஜை முடிக்கும் வரை நாங்க அறையை விட்டு வரக்கூடாது என்றும் பொதுவான பாத்திரங்களை தொடக்கொடாது என்று அப்புறம் என்னை வைத்தா என்ன அர்த்தம் என்றேன் அவள் அதற்கு நான் சொன்னது இது இல்லை சுமதி சொன்னது எல்லாம் உண்மையா என்று புதிர் போட்டாள் ஆக இதற்கு சூத்திரதாரி சுமதி என்று நான் உகித்தது சரி என்று தெரிந்து எனக்கு எப்படி தெரியும் அந்த பேய் உன் கிட்டே என்ன சொன்னது என்று இப்படி நான் பதிலுக்கு கத்த எங்க வீட்டு ஹால் கார்கில் போர் மைதானமாக மாறியது. அம்மா கையை ஓங்கி (அவள் எப்போவுமே கையை ஓங்குவாலே தவிர எங்கள் மேல் அவள் கை அடித்ததே இல்லை) என்னை விட சத்தம் அதிகம் குடுத்தால் நீ பண்ணறது சரியாகி விடுமா என்று மீண்டும் சொல்ல நான் பொறுமை இழந்து நான் என்ன பண்ணேன் அதை சொல்லு என்னமோ அடுத்த வீட்டு ரவி கூட ஓடி போய் விட்ட மாதிரி புலம்பறே என்று நான் பதில் தர இதை நான் சொன்னது அம்மாவை ஆத்திரம் மூட தான் என்றாலும் அது தான் சுமதி கூறி இருந்த பொய் என்று எனக்கு தெரியாது, இதை கேட்டதும் அம்மா மாகாளி மாதிரி முறைத்து அப்படி சொல்லு அப்போ அவ சொன்னது உண்மைதான் என்று கத ஆரம்பித்தாள் அப்போ கூட அவ என்று அம்மா யாரை சொன்னா என்று புரியவில்லை அது தான் புரளி பேசுவதற்கு என்றே இருக்கிறார்களே மாமிகள் அவர்கள் கட்டு கதையாக இருக்கும் என்ற நினைப்பில் நான் ஆமா அவ சொன்னா மாதிரி நீ இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தே நான் அவனோடு ஓடி போக தான் செய்வேன் என்றேன். அப்போ தான் அம்மா அந்த குண்டை போட்டாள். ஏண்டி உன்னை போல தானே சுமதியும் இருக்கா அவ இந்த மாதிரி வம்பு எல்லாம் செய்யறாளா நல்ல வேளை இந்த விஷயம் சுமதி முன் கூட்டியே என் கிட்டே சொல்லிட்டா என்றதும் நான் காளி ஆனேன்.

Reply With Quote
  #3  
Old 20th May 2011
jlt007 jlt007 is offline
 
Join Date: 6th August 2010
Posts: 250
Rep Power: 20 Points: 179
jlt007 is beginning to get noticed
Wrong section post it on stories

Reply With Quote
  #4  
Old 20th May 2011
pondyservice1's Avatar
pondyservice1 pondyservice1 is offline
XossiP - Real Fun without GST
Visit my website
  Super Moderator: Moderator of all forums    Pornopedia of Xossip: Encyclopedia of Desi Porn    MasalaDesi Birthday Feast: Winner - Downloaders Category    Gold Coins: Contributed more than $100 for XP server fund      
Join Date: 3rd June 2005
Location: NEAR U, THRO WWW
Posts: 326,870
Rep Power: 764 Points: 540852
pondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps databasepondyservice1 has hacked the reps database
>>> Stories

Next time post in correct section
______________________________

Reply With Quote
  #5  
Old 20th May 2011
mohini_7 mohini_7 is offline
Custom title
 
Join Date: 27th March 2007
Posts: 2,004
Rep Power: 36 Points: 8151
mohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autograph
sorry about the mistake tried to remove it immediately but didnt know how to do that sorry once again
mohini

Reply With Quote
  #6  
Old 21st May 2011
mohini_7 mohini_7 is offline
Custom title
 
Join Date: 27th March 2007
Posts: 2,004
Rep Power: 36 Points: 8151
mohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autograph
அம்மா அதை பற்றி கவலை படாமல் ஹாலில் அமர்ந்து தலையில் கையை வைத்து உட்கார்ந்து இருந்தாள். உள்ளே சென்றதும் ஸ்ரீமதி சுமதி எதற்காக இப்படி அபாண்டமா பழி போட்டாள் என்று யோசிக்க அவளுக்கு சரியான காரணம் தெரியவில்லை. ஸ்ரீமதி அன்று அவளுக்கு ரெண்டாம் நாள் என்பதால் உடல் உபாதை வேறு அவளை துன்புறுத்தியது. அவள் படுத்துக்கொண்டு தலையணையை வயிற்றில் அணைத்து பிடித்து படுத்துக்கொண்டே கண்ணை மூடினாள். அப்போதும் அவளுக்கு ஏன் தேவை இல்லாமல் மூன்றாம் வீட்டில் இருக்கும் எவனோ ரவி என்பவனை தன்னுடன் சேர்த்து அம்மாவிடம் சுமதி சொல்ல வேண்டும் வெளி ஆள் என்று இருந்தாலும் ஓர் அளவு அவளுக்கு சமாதானம் ஆகி இருக்கும் ஆனால் சொன்னது அவளுடன் ஒட்டி பிறந்த சுமதி. ஸ்ரீமதி தலையை பிய்த்து கொண்டாள். அடுத்து அவள் கண் முன் வந்தது அவள் எதிர்பார்த்தே இல்லாத ரவி அவள் சும்மா வீம்புக்காக அவனை அம்மா எதிரே அவன் பெயர் ரவி என்று தெரியாமல் உன் பெயர் ரவியா என்று கேட்க அவன் ஆம் என்று சொன்னது அவளுக்கு பெரிய அதிர்ச்சியை தான் தந்தது. அதும் அவள் இது வரை அவனை பார்த்ததே இல்லை. ஆனால் அவள் அவனை பார்த்ததில் அவன் கொஞ்சம் ச்மார்டாகதான் இருந்தான் அவள் கூட படிக்கும் அமாஞ்சிகளை ஒப்பிடும் போது அவன் பல மடங்கு நன்றாகத்தான் இருந்தான். அதுவும் அவன் அம்மாவை பார்க்கும் போது நிச்சயமாக அவனும் பிராமண வகுப்பை சேர்த்தவன் தான் என்று தெரிந்தது. ஆனால் இதெல்லாம் ஏன் இப்போ அவ யோசிக்கறா என்று அவளுக்கே புரியாமல் அந்த யோசனையை தவிர்த்தாள்.

ஆனால் அவள் எவ்வளுவு தான் முயன்றும் அவள் கண் முன்னே அவன் உருவம் தான் வந்து வந்து போனது. கடவுளே ஏன் இப்படி என்னை போட்டு வதைக்கறே நான் இதனை வருடம் சமத்தா வீட்டிற்கு அடங்கிய நல்ல ஐயர் பெண்ணாக தானே வளர்ந்தேன் இப்போ கடைசி ஆண்டு முடித்து ஒரு வேலைக்கோ அல்லது அப்பா விடம் சொல்லி இருக்கவே இருக்காங்க நிறைய ஐயர் பசங்க அமெரிக்காவில் ஒருவனை பார்த்து அவனுக்கு வாக்க பட்டு ஒழுங்கா அவனுடன் அமெரிக்காவில் குடி ஏறி ஒன்றோ ரெண்டோ குட்டி போட்டு குடும்பம் நடத்த தானே கனவு கண்டேன் இப்போ ஏன் இப்படி ஒரு சங்கடம்.

Reply With Quote
  #7  
Old 21st May 2011
mohini_7 mohini_7 is offline
Custom title
 
Join Date: 27th March 2007
Posts: 2,004
Rep Power: 36 Points: 8151
mohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autograph
ஸ்ரீமதி லேசாக கண்களில் நீர் விட உடனே துடைத்து கொண்டு சே நம்ப பண்ணாத தப்பிற்காக வருந்த கூடாது என்ற வைராகியம் வர அவள் எழுந்து பாத் ரூமில் சென்று முகம் அலம்பி வந்து அவள் பாட புத்தகத்தை எடுத்து புரட்டினாள். ஆனால் புத்தகம் பக்கங்களிலும் அந்த பாழா போன ரவி முகம் தான் தெரிந்தது. புத்தகத்தை மூடி விட்டு இன்று சுமதி வந்ததும் இதற்கு ஒரு தீர்வு கண்டால் தான் நல்லது என்று நினைத்து படுக்கையில் படுத்து தலையணையை முகத்திற்கு மேல் வைத்து அழுத்தி அப்படியே மீண்டும் தூங்கி போனாள். அம்மா கதவை தட்டும் போது முழிப்பு வந்து கதவை திறக்க கொஞ்ச நேரம் தூக்கத்திற்கு முன் நடந்தவை எல்லாம் மறந்து போக அம்மாவை பார்த்து வழக்கமான சிரிப்பை உதிர்க்க அம்மா பதிலுக்கு முகத்தை கடுப்பாக வைத்திருக்க ஸ்ரீமதிக்கு ரவி நினைவு மீண்டும் வந்து தொலைத்தது. அம்மா தான் முதலில் பேசி அவளை பார்த்து வா வந்து கொட்டிகோ எனக்கு ஏன் அந்த பாவம் பெத்த மகளை பட்டினி போட்டேன் என்ற பழி என்று உறும ஸ்ரீமதி அவளுக்கு பதிலாக எனக்கு ஒன்னும் இப்படி சொல்லி சாப்பாடு போட வேண்டாம் நான் படிநி கிடந்தே சாவறேன் இரு இப்போவே அப்பா கிட்டே பேசி நீ சொல்லறதே சொல்லி அவரை இப்போவே வர சொல்லறேன் என்று கத்த அம்மா அது ஒன்னு தன குறைச்சல் அந்த மனுஷன் ஏன் நிம்மதியா இருக்கார்னு அவரையும் கூப்பிட்டு அவரையும் சாவடிசுடு என்று புலம்ப ஸ்ரீமதி நிஜமாகவே ரொம்ப புண் பட்டாள் இத்தனைக்கும் அம்மா செல்லம் என்று எல்லோரும் ஸ்ரீமதியை தான் சொல்லுவார்கள் ஆனால் அவளே இப்படி வையும் போது ஸ்ரீமதி மனம் சங்கட படுவது தவறில்லை.
அம்மா சென்று விட ஸ்ரீமதி அவளை பின்தொடர்ந்து சென்று தரையில் அமர அம்மா அவள் முன்னே தட்டை வைத்து சூடாக இருந்த சாதம் மற்றும் கீரை போட ஸ்ரீமதி வேண்டா வெறுப்பாக சாபிட்டாள். அவள் அப்படி செய்ததற்கு காரணம் அவள் சாப்பிடவில்லை என்றால் அம்மாவும் சாப்பிட மாட்டாள் என்று அவளுக்கு நன்றாக தெரியும். ஸ்ரீமதி சாப்பிட்டு தட்டை அலம்பி அங்கேயே வைத்து எழுந்து மீண்டும் அவள் அறைக்கு சென்றாள். அவளுக்கு தூக்கம் வராது என்பதால் என்ன செய்வது என்று அவள் அறையை சுற்றி பார்க்க அவளுக்கு சுமதி செல்ப் கண்ணில் பட அதை ஆராய்ந்து எதாவது கிடைகிறதா என்று பார்க்கலாம் என்று அதில் இறங்கினாள்.
அவளுக்கு தெரிந்த சில விஷயங்களை தவிர்த்து மேலும் ஆராய அவளுக்கு கண்ணில் பட்டது ஒரு பிறந்த நாள் வாழ்த்து அட்டை. அதில் with love என்று போட்டு கீழே வெறும் மூன்று கேள்வி குறிகள் போடப்பட்டிருந்தது. ஸ்ரீமதிக்கு ஆவல் அதிகமாகியது யார் இந்த கேள்வியின் நாயகன் என்று ஆராய ஆரம்பித்தாள்..

Reply With Quote
  #8  
Old 21st May 2011
bangaloreguy bangaloreguy is offline
Custom title
 
Join Date: 31st March 2006
Posts: 1,336
Rep Power: 33 Points: 1295
bangaloreguy is a pillar of our communitybangaloreguy is a pillar of our communitybangaloreguy is a pillar of our communitybangaloreguy is a pillar of our communitybangaloreguy is a pillar of our communitybangaloreguy is a pillar of our community
நல்ல ஆரம்பம் வாழ்த்துக்கள்
______________________________
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

Reply With Quote
  #9  
Old 21st May 2011
mohini_7 mohini_7 is offline
Custom title
 
Join Date: 27th March 2007
Posts: 2,004
Rep Power: 36 Points: 8151
mohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autograph
**யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டாள். மீண்டும் அம்மா தேவை தட தட தட என்று தட்ட நான் எழுந்து கதவை திறக்க அம்மா தான் கோவிலுக்கு செல்வதாகவும் அது வரை ஹாலில் வந்து இருக்கும் மாறு கூறினாள். அத்துடன் முடித்திருந்தால் நான் கோப பட்டிருக்க மாட்டேன் கூடவே ஸ்ரீ நான் அப்படி போனதும் கதவை மூடி மொட்டை மாடிக்கு பொய் விடாதே என்று ஒரு கொக்கி போட என்னுள் மீண்டும் அனல் கிளம்பியது. இருந்தும் இந்த சூழ்நிலையில் தான் என்ன தான் கொபபட்டாலும் பிரயோஜனம் இல்லை என்று நினைத்து அம்மா போனதும் கதவை அடைத்து ஹாலுக்கு வந்தேன். மியூசிக் சிஸ்டம் போட்டு எனக்கு பிடித்த இளையராஜா பாட்டுகளை போட்டு அமர்ந்தேன் கொஞ்ச நேரம் பாடல்கள் காதுக்குள் சென்று ஒரு அமைதியை தந்தது. வரிசையாக காதல் பாட்டுகளாக வர சண்டாளன் ரவி என் மனக்கண் முன் ஆஜர். வீட்டிலே தான் யாரும் இல்லையே என்று நானே அவனுடன் ஒரு வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தேன். அவன் இல்லாததால் என் வாயில் வார்த்தைகள் சரளமாக வந்தன. "எண்டா ரவி உனக்கு எப்படி சுமதியை தெரியும் எதுக்கு அவ மூலமா எனக்கு தூது விடுவதற்கு பதில் என் அம்மா கிட்டே மாட்டி விட்டே தயவு செய்து நீயே வந்து இன்னைக்கு ராத்திரி அம்மா கிட்டே சொல்லிடுடா உனக்கும் எனக்கும் ஒரு மண்ணும் இல்லை என்று இப்படியாக என் ஓரங்க சம்பாஷனை போக பிறகு நானே இது என்ன முட்டாள் தனமாக பிதற்றுகிறேன் என்று நிறுத்தினேன். இது நின்ற அடுத்த நிமிடம் அவன் மீண்டும் ஆஜர் ஐயோ இப்போவும் ஒரு கனவாக தான். ஆனால் இப்போ அவன் பாக்க ஒரு மனதை ஈர்க்க கூடிய சுட்டியான பையனாக காட்சி அளித்தான். எங்க குடும்பத்தில் இருக்குதுங்களே அமாஞ்சிகள் மீசையை சுத்தமாக வழிச்சி நெத்தியிலே பட்டை முக்கால் நீளத்திற்கு ஒரு அழுக்கு வேஷ்டி மேலே அயன் பாக்ஸ் பார்க்காத ஒரு சட்டை. அம்மாக்களின் முந்தானை பிடித்து அலையும் அதுகளை ஒப்பிடும் போது, ரவி நூறு மடங்கு மேல் உயரமாக இருந்தான் அரும்பு மீசை குறும்பு பார்வை ரெண்டு நாள் ஷேவ் பண்ணாமல் இருந்த குறுந்தாடி வேஷ்டிக்கு பதில் ஜீன்ஸ் கழுத்தில் வாக்மேன் கேட்பதற்கு அடையாளமாக இயர் போனஸ் மொத்தத்தில் அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் மாதிரி இல்லாமல் மௌன ராகம் கார்த்திக் போல இருந்தான். இப்படி ஒரு முடிவுக்கு வரும் வேளையில் கரடி மாதிரி காஸ் காரன் உள்ளே வந்தான்.

Reply With Quote
  #10  
Old 21st May 2011
mohini_7 mohini_7 is offline
Custom title
 
Join Date: 27th March 2007
Posts: 2,004
Rep Power: 36 Points: 8151
mohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autographmohini_7 has celebrities hunting for his/her autograph
காஸ் காரன் உள்ளே வந்து சிலிண்டர் மாற்றி பணம் வாங்கி செல்ல நான் தேவை தாழ் போடாமல் உள்ளே ஹாலுக்கு வந்தேன் மீண்டும் கார்த்திக் கனவுக்கு போக முற்ப்பட்டேன் ஆனால் அவ்வளவு எளிதாக கார்த்திக் கனவில் வருவாரா உம எவ்வளவு முயன்றும் வரவில்லை அதற்கு பிறகு ரவி மறைந்தான். கொஞ்ச நேரத்தில் வில்லி உள்ளே வந்தாள் வரும் போதே அவள் பார்வை எதையோ தேடியது. நான் அமைதியாக இருந்தேன் வில்லி நு சொன்னது அம்மா இல்லை சுமதி. அவள் எங்க ரெண்டு பேர் அறைக்குள் சென்று உடை மாற்றி முகம் அலம்பி என் பக்கத்தில் அமர்ந்து ஹே ஸ்ரீ அம்மா எங்கே கேள்விக்கு அவளே பதிலும் சொல்லி கொண்டாள் ஒ இன்னைக்கு வெளிகிழமை கோவில் இருக்கும் சரி என்ன நீ காலேஜ் டிமிக்கி என்று என்னை நோண்டினாள் நான் அப்போவும் அமைதியாக இருந்தேன் அவளுக்கு பொறுமை இழந்து ஹே ஸ்ரீ இன்னைக்கு வீட்டிலே தானே இருந்தே ஏதாவது யூத்தம் நடந்ததா என்றவுடன் நான் அவள் அருகே சென்று அவள் ஜடையை பிடித்து ஏன் டி இப்படி அபாண்டமா சொன்னே என்று அவளை உலுக்கினேன் அவள் ஒன்னும் தெரியாத பாப்பா போல நான் என்ன பண்ணினேன் என்று பதிலுக்கு என் கழுதை பிடித்து என்னை தூர தள்ளினாள். நான் அவள் ஜடையை இறுக்கமாக பிடித்திருந்ததால் நான் தூரம் போக அவளும் கூடவே வந்தாள். சுமதி ஸ்ரீ இப்போ எதுக்கு என்னை வம்புக்கு இழுக்கிறாய் என்று கேட்க எனக்கு பொறுமை போனது அவளை இழுத்து தரையில் தள்ளி இப்போ சொல்லு யார் அந்த ரவி அவனையும் என்னையும் ஏன் தேவை இல்லாமல் அம்மா கிட்டே சேர்த்து சொன்னே என்று கேட்க அவ சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த ரவி ஒரு வாரம் முன்பு சுமதியை வழியில் பார்த்து அவளிடம் ஒரு கடிதத்தை குடுத்து ஒரு வாரமா ஸ்ரீமதி என்னை பார்க்கவில்லை என்றும் அவளுக்கு என் மேல் ஏதாவது கோபம் இருந்தால் இந்த கடிதில் மனிப்பு கேட்டு எழுதி இருக்கிறேன் அதை கொஞ்சம் குடுத்து விடு என்று சொல்லி இருக்கிறான் சுமதி அதில் குழம்பி போய் வேறு வழி தெரியாமல் அம்மாவிடம் போட்டு குடுத்திருகிறாள் அவள் அதை சொன்னதும் என் பிடி தளர்ந்தது.
அவளை எழுப்பி விட அவள் பேரு மூச்சு விட்டு கொண்டே என்னை பார்த்து ஹே ஸ்ரீ இதுக்கு நீ திருப்பியும் என் கிட்டே வாங்க தான் போறே இரு என்றாள் நான் அவளை சமாதானம் படுத்தும் வகையில் ஹே சுமி சாரி அந்த லெட்டர் இப்போ எங்கே என்றேன்
அவள் அது மட்டும் நான் அம்மா கிட்டே குடுத்து இருக்கனும் அப்போ தெரிந்து இருக்கும் என்று கூற அவள் அதை அம்மாவிடம் குடுக்கவில்லை என்று புரிந்து கொண்டு கொஞ்சம் அறுதல் அடைந்தேன். அவளும் கொஞ்சம் அடங்கி ரவி பற்றி கொஞ்சம் கேவலமா பேசினாள் அது என்னமோ எனக்கு பிடிக்கவில்லை அவளை தடுத்து நிறுத்தி ஹே சுமி அவன் யாரோ ஏன் அவனை பற்றி இப்படி இகழ்ச்சியா பேசறே என்றேன்.
சுமதி இப்போ என்னை பிடித்து கொண்டாள். உனக்கு அவனை தெரியாத பொது அவனுக்கு ஏன் நீ வக்காலத்து வாங்கறே என்று சொல்ல நான் என் தவறை உணர்ந்தேன் மீண்டும் அவ கிட்டே சாரி சொல்லி அவளை சமாளிக்க அவள் கொஞ்சம் அடங்கினாள்.

Reply With Quote
Reply Free Video Chat with Indian Girls


Thread Tools Search this Thread
Search this Thread:

Advanced Search

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

vB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off
Forum Jump


All times are GMT +5.5. The time now is 01:00 AM.
Page generated in 0.02437 seconds